பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

29



8. கீழ்திசையின் இனத் தேசீய மையம்

வெள்ளையர் வடதிசை ஆட்சிபெற்று வடவர் துணையால் தென்னகத்தில் பரவவில்லை. நேர்மாறாகத் தென்னக ஆட்சி கைப்பற்றி, தென்னவர் வீரம், தென்னவர் செல்வம் ஆகியவற்றின் துணைகொண்டே தங்கள் ஏகாதிபத்தியத்தை வடக்கே இந்தியா, பாகிஸ்தான் பரப்புக்களிலும், 'பட்டாணிஸ்தான்' பரப்புக்களிலும், பர்மாவிலும், சிங்கப்பூரிலும், இலங்கையிலும், ஏடனிலும் விரிவுபடுத்தினார்கள். அதுபோலவே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த உயிர்த்தேசீயம் ஏடனிலோ, பர்மாவிலோ, சிங்கப்பூரிலோ, இலங்கையிலோ தொடங்கவில்லை. அவற்றில் தேசீயம் பரவுவதற்கு முன்னே அவற்றைத் துண்டித்துவிடத்தான் அவ்ஏகாதிபத்தியம் விரைந்தது. அப்படியும் பிரிந்த பர்மாவும், இலங்கையும் இந்தியா சுதந்திரமடைந்த அன்றே தாமும் சுதந்திரம் அடைந்தன. மலேயாவிலும் தேசீய உணர்ச்சி இந்தியாவிலிருந்து பரவி, அதுவும் இந்தியாவை அடுத்துச் சுதந்திரம் பெற்றுள்ளது.

ஆனால் இந்தியாவினுள்ளே இத்தேசீய ஆர்வம், விடுதலைக்கனல், வடக்கே இந்தியப்பரப்பிலோ, பாகிஸ்தான் பரப்பிலோ, பட்டாணிஸ்தான் பரப்பிலோ தொடங்கவில்லை. தென்னகத்திலேயே வேர்விட்டு வடதிசையில் படர்கொடியாகமட்டுமே பரந்தது. அது பரவாமல் தடுப்பதற்கு வெள்ளை ஏகாதிபத்தியம் துண்டுப்படுத்திப் பிரிக்கும் மந்திரத்தை அன்று கண்டுபிடிக்கவில்லை. கனலை விட்டுத் தொலைவில் தங்கள் ஏகாதிபத்தியத் தளத்தை மாற்றியமைக்கவே வெள்ளையர்கள் அன்று முயன்றனர்.

தென்னகத்தில் 1752-இல் ஆர்க்காட்டைக் கைப்பற்றிய பின்தான்,வெள்ளையர்கள் வடதிசையில்