பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

35

நாகரிகமும் வளர்த்த பேரரசன் அவன் ஒருவனே- அசோகனோ பிறரோ அல்லர்.


9. கடலாண்ட இனம் திராவிடம்

திராவிடம் பண்டிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை உலகின் செல்வவளமிக்க நாடு. திராவிடர் நாகரிக உலக நாடுகளெங்கும் சென்று குடியேறியும், வாணிகம் வளர்த்தும் உலகின் குபேர நாடுகளில் முதல் குபேர நாடாகத் தம் மாநிலத்தை வளமாக்கி யிருந்தனர். இன்றுபோல் உலகின் வாணிக விலைக் களமாகத் தென்னாடு என்றும் - அணிமைக்காலம் வரையிலும் - இருந்ததில்லை. தொழிலும் வாணிகமும் பெருக்கி, உலகெங்கும் தன் விலையேறிய சரக்குகளை அனுப்பி, நாகரிக உலகையே திராவிடர் தம் வாணிகப் பெருங்களமாக்கியிருந்தனர். இதற்கேற்ப ஆழ்கடல் கடக்கும் கப்பல்களும் கப்பல் தொழிலும் திராவிடத்திலே செழிப்புற்றிருந்தன.

இரண்டாயிர ஆண்டுகளுக்குமுன் இமயம்வரை வென்று பர்மாவையும் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்திருந்த ஆந்திரப் பேரரசர் ஆழ்கடல் செல்லும் இரு பாய்மரக் கப்பல்களையே தம் நாணயங்களில் வீறுடன் பொறித்திருந்தனர்! இராசேந்திர சோழன் 12-ஆம் நூற்றாண்டில் கடாரம் அதாவது தென்கிழக்காசியாவை வென்று ஆண்டது இத்தகைய கப்பல் தொழிலின் உருத்தகு வெற்றிக்கு ஒரு சான்று.

19ஆ-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நீராவிக் கப்பல்கள் புதிதாக உலகில் எழும்வரை உலகின் சிறந்த கப்பல்களும், மிகப் பெருங் கப்பல்களும் தென்னகத்தில் செய்யப்பட்ட திராவிடக் கப்பல்களே. வெள்ளையர் திராவிடத் தச்சர்களைத் தம்