பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

37

தின் வடதிசை உருவிலாப் பரப்பு. திராவிடர் பண்டைக் கடலோடி இனங்களில் முதல் இனமாவர்; ஆரியரோ உலகின் பண்படா நாடோடி இனமாய் வாழ்வு தொடங்கி இன்றுவரை கருத்திலும் கனவிலும்கூட அது கடந்து சிந்தனை செலுத்தாதவராய் உள்ளனர். தண்ணீரைக் கண்டால் வாலைக் கால்களுக்கிடையில் சுருட்டிப் பதுங்க வைத்துக்கொண்டு பின்னேறும் 'நாட்டு நாய்' போன்றவர்களாகவே அவர்கள் இன்றும் உள்ளர்.

தொல்காப்பிய காலத்திலிருந்து தமிழருக்குரிய 'முந்நீர் வழக்கம்' அதாவது கடல் வாணிக மரபினை, ஆரியர்களும் அவர்கள் இலக்கியமும் அறியா. அவர்களின் சுமிருதி ஏடுகள் இதை திராவிடருக்குரிய தகாவழக்கம், ஆரியர் மேற்கொள்ளக்கூடாத பெரும் பழி என்று இதனைக் கண்டித்தன. திராவிடர் கடல் கடந்து வாணிகமும் குடியேற்றமும் கண்டனர். ஆரியரோ கடல் கடந்தவரை-திராவிடரைக்கூடத் தம் சாதி வருணாசிரமக் கோட்டையிலிருந்து விலக்கி வைக்கச் சட்டம் இயற்றினர். திராவிடப் பேரரசர் உலகெங்கும் கடல் கடந்த பேரரசுகளும் பேரரசத் தொடர்புகளும் கொண்டனர். இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்ட பாண்டியர், உரோமப் பேரரசர் அகஸ்டஸுடன் தூதுத் தொடர்பும் அரசியல் கூட்டுறவும் கொண்டனரென்றால், அதே உறவை 13-ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டியர், சீனப்புகழ்ப் பேரரசன் குப்ளாகானுடன் மேற்கொண்டிருந்தனர். இவ்விரு கோடிக்கும் இடைப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கிடையே இதேபோன்ற தொலை உலகத் தொடர்பு பல்லவப் பேரரசருக்கும் சோழப் பேரரசர்க்கும், சாளுக்கியப் பேரரசர்க்கும் இருந்தது. ஆனால் வடதிசையோ நிலப் பேரரசன்றிக் கடற் பேரரசு அறியாதது. கடல் கடந்த,