பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f05

நெஞ்சு பொறுக்காது. நீங்க புறப்படுங்க. உங்க பவளமும் சினிமா பார்க்க ஆவணத்தாங் கோட்டைச் சாலைக்கு அதோட ஆயா கூடப் புறப்படப் போகுது 1.

பவளக்கொடி பணிவாடை கெட்டாப்பிலே வீசுது. நீங்க கிளம்புங்க, அத்தான் ! நாளைக்க காளிக்கு அப்பா ஆடு பலி கொடுத்துப் பிரார்த்தனே செலுத்தப் போருங்க. கட்டாயம் வத்திடுங்க. டா.டா !

பவளக்கொடி உட்புறம் செல்ல, முத்து தயக்கத்துடன் மெல்ல நகர முனயும் தருணத்தில், அவன் கையிலிருந்து காகி தம் ஒன்று கழுவி விழுகிறது. அதைச் சந்தடியின்றி எடுத்துப் பிரிக்கிறார் வையாபுரி. படிக்கத் தொடங்குகின்றார் சீமான் வையாபுரிச் சேர்வைகாரர்.

வையாபுரி 3 “அன்புப் பூரணி ...(தொடர்ந்து முத்துவின் குரல் ஒலிக்க வேண்டும்) உள்ளைப் பெற்ற புண்ணியவதியான மீனுட்சியை நிரபராதி என்று இதே சமுதாயம் உய்த்துணரக் கூடிய காலம் தூரத்தில் இல்லை. உன் அன்னைக்குக் காளியைச் சாட்சி வைத்துத் தாலிகட்டி விட்டு, பதினறு வருஷங்களாக ஒடி ஒளிந்து கொண்டி ருக்கும் உன் தந்தையை - தந்தையாகிய பாவியை இனம் கண்டு, அவர் மூலம், உன் தாய்மீது இச் சமுதாயம் சுமத்தியுள்ள அநியாயப் பழியை விலக்கச் செய்யும் நாளும் நெருங்கி.” - -