பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

காட்சி: 22

முத்துவின் வீடு : இரவு.

வாசல் நிலவில் கின்றவாறு, கையிலிருக் கும் கடிதத்தைப் பிரித்தபடி காட்சி யளிக்கிருன் முத்து.

{குரல்) : அன்புப்பூரணி பாவிகளை ரட்சிக்க ஏசுவருவாரென்று சொல்கிறார்கள். ஒருவேளை, அதல்ைதான் காளி.ஆத்தாளும் வழி விட்டு ஒதுங்கிக் கொண்டாளோ, என்னவோ? அதன் விளைவாகவே, குற்றவாளியின் சுய ரூபமும் இது வரை அம்பலமாகாமல் தப்பி விட்டதோ, என்னவோ? குற்றவாளியே நீதிபதியானுல், தர்மம் எப்படிப் பிழைக்கும்? சத்தியம் எப்படி வாழும்? உன் தாய்க்குத் துரோகம் இழைத்த பாவியை இனம் கண்டு கொண்டால்தான் எனக்கு நல்ல மூச்சு வரும் ! அந்தப் பொறுப்புக்கு நீதான் எனக்குக் கை கொடுக்க வேண்டும் ... ஆமாம், உன் கைகளை மட்டுமல்லாமல், உன் இதயத்தையும் எனக்குக் கொடுக்க வேண்டும். நீயும் நானும் இந்தச் சமுதாயத்தின் முன்னே மனைவியும் கணவனும் ஆகிவிட்டால், அப்பால், அந்தப் புதிய பந்தத்தின் மூலம் என் லட்சியக் கனவும்