முத்து ே
பூரணி ே
முத்து ே
15 i
தன்மான மும் எனக்கென்று ஒரு சமுதாய கடமையைச் செயல் படுத்த ஆணையிட்டி ருக்கிறது !... எதையும் தாங்கும் இதயம் எனக்கு உண்டு எதையும் சமாளிக்கும் இதயமும் எனக்கு இருக்கிறது ... பூரணி, நான் காளியை நம்புகிறவன். ஆகவே, நீ என்ன நம்பு. நாம் நம்புகின்ற காளி ஆத்தா சந் நிதியிலேலே வருகிற தை மாதம் இருபத்தைந்தாம் தேதி நான் உனக்குத் திருப் பூட்டப் போகிறேன் ! பயமும் பயங்கரமும் மண்டின சூறைக் காற்றுக்கு நடுவில்ே எரியும் அகல் விளக்கைப் பாதுகாப்போடு ஏந்தி, எதிர் நீச்சல் போடப் போகிறேன் !-கானி எனக்குத் துணை நிற்பாள் ! நீயும் எனக்குத் துணை நிற்பாயல்லவா?
இப்படிக்கு,
முத்து.”
முத்துவின் குரல் முத்து’ என்று ஒலிக் கிறது.
ஆரணி கடிதத்தைப் படித்து முடித்து விட்டு, ஆனந்தக் கண் ணி ரு டன் முத்துவை ஏறிட்டுப் பார்க்கின்றாள்.
(பரவசத்துடன்) பூரணி !
(லயிப்புடன்) அத்தான் ...
(உறுதியுடன்) பூரணி காளி ஆத்தா வெறும்
கல் இல்லே. அதனுல்தான், உன்னுேட ஆத் தானக் காளியைச் சாட்சி வச்சுத் தாலி கட்டிக்