உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214


வையாபுரி 3 (மிரண்டு) சரி, சரி. மாப்பிள்ளை என்னு

பண்ணுதாம் ?

அருளுசலம் (விழித்து) எனக்கு மாப்பிள்ளை உண்டாகிற துக்கு பொண் குட்டியே கையிலே மடியிலே கூட இல்லிங்களே ?-சீமான் மச்சான் இன்ன மும் மீனுட்சியோட ஒலைக் குடிசையிலேயே தான் நின்னுக்கிட்டு இருக்கீங்களாக்கும் ?

வையாபுரி 3 (அதிர்வுடன்) ஒப், நான் என் மாப்பிள்ளை

யைக் கேட்டேன் !

அருளுசலம் (தெளிந்து) ஒகோ, என் மகனைச் சொல்லுறி

களா ? -

வையாபுரி 3 (சினத்துடன்) ஊம்...ம் ! உம்மக்கிட்டே ஒரு விசயத்தைக் கறக்கிறதுக்குள்ளாற, குன்னக் குடிக்கே காவடி தூக்கிட்டு வந்திடலாம் !

அருளுசலம் ே(பதமாக) நீங்க இனி ஒண்ணும் காவடி கீவடி தூக்க வேண்டி வராதுங்க, சிங்கப்பூர்க் காரவுகளே ! உங்க மாப்பிள்ளையும் என் தலை மகனுமான இளையராஜா முத்துச் சேர்வை கும்பகருண அவதாரம் எடுத்திட்டாருங்க !

வையாபுரி 3 (தெளிந்து) சபாசு ! உமக்குப் பாரதக் கதை கூடத் தெரியுதே ? மாப்பிள்ளை தூங்கிடுச்சு தானே ?

அருளுசலம் (இணக்கமாக) ஊம்

வையாபுரி 3 (ஆறுதலுடன்) நல்லகாலம், நான் பிழைச்

சிட்டேன் ! o