பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனுட்சி :

பூரணி :

22

ஏச்சையும் பேச்சையும் கேட்டதும் என் நெஞ்சே வெடிச்சிடும் போலிருந்திச்சு. அங் கிட்டாலே ஒடிப்போய் பாதாளக் கேணியிலே குதிச்சு உசிரைப் போக்கிக் கிடலாமான் னுகூட ஒடுச்சு ! ஆ,ை என்னைச் சுமந்து பெற்ற உன்னுேட நினைப்பு வந்தடியும் ஒடியாந்திட் டேன், ஆத்தா நான் செத்துச்சிவலோகம் பறிஞ்சிட்டேன்கு, அப்பாலே உனக்கு இந்த ஊர் நாட்டிலே வேறே நாதியே இல்லையே, ஆத்தா ?

விம்முகிருள் பூரணி.

(பதறியவாறு)பூரணி, மெய்யாலுமே நல்லவங்க நம்பளை ஆண்டுக்கிட்டு இருக்கிற இந்த நல்ல நேரத்திலே, நீ சாகிறதைப்பத்தி இனிமேல் கணுவிலே கூட எண்ணப்புடாது; ஆமா, சொல் லிட்டேன் ! காளியை நம்பி, அவளைச் சாட்சி யும் வச்சு, நான் தாலி ஏந்திட்டேன். தாலி கொடுத்தவனுக்கு முந்தானையும் விரிச்சேன். ஆகு, அந்தப் புண்ணியவானே ராவோடு ராவாய் எங்கிட்டோ மாயமாய் மறைந்சிட்டான். (தாலியை எடுத்துக்காட்டி) பூரணி ! இந்தச் சமுதாயம் என் தலைமேலே அநியாயமாய்ச் சுமத்தியிருக்கிற பழிபாவச் சுமையையும் இந்தப் பதினறு வருசமாய் சுமக்க முடியாமல் சுமந்துக்கிட்டு இருக்கேனே-ஏன் தெரியுமாடி, ராசாத்தி?...

நல்லாத் தெரியும் ... ஊர் உலகத்துக்காக சிலுவையைச் சு. ம ந் தா ரா ம் ஏசுநாதர். அதொப்ப, நீ எனக்கோசரம் எல்லாச்சுமையை யும் உன்னுேட தங்கமான நெஞ்சிலே சுமந்துக் கிட்டு இருக்கே ! ஆமா, ஆத்தா, ஆமாம் !...