உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259


காட்டி) இந்தக் காளியைச் சாட்சிக்கு வச்சு, வள்ளிசாகப் பதிறுை வருஷத்துக்கு முந்தி ஒரு ராவுப் பொழுதிலே நான் இத்தப் பவித்திரத் தாலியை மனசொப்பி ஏத்திக்கிட்டேன்!-ஆன. இந்தத் தாலிக்குச் சாட்சி சொல்ல, தாலிகட்டின. என்னுேட புண்ணியவானும் இதுவரை முன் வரல்லே - நான் தாலி கட்டிக்கிட்டதுக்குக் சாட்சியாய் இருந்த இந்தக் காளியும் அப்ப இருந்த மாதிரியே இப்பவும் வெறும் சுல்லா கவே இருக்கிருள் ... என்ளுேட கழுத்துத் தாலிக்கு தானேதான் சாட்சி ! என்னுேட தூய்மைக்குச் சாட்சி சொல்லத்தான் இதோ, தீ பற்றி எரிஞ்சுக்கிட்டிருக்குது ... நான் அன்பைப் பிச்சையாகக் கேட்டேன் - அந்த அன்பை எனக்குத் தாலி கொடுத்த என் மகராசனும் கொடுக்க மறுத்திட்டார்; என் தாலிக்குச் சாட்சி நின்ன காளியும் அந்த அன்பை வழங்கல்லே - அதேைல, அந்த அன்பை இதோ, நானே எனக்கு வாரிவாரி வழங்கிக்கிட்டு இருக்கேன் ... இப்பவும் சொல் லிப்பிடுகிறேன் - கல் இல்லே காளி ! காளி கல்லே இல்லை ! காளி, காளிதான் !-காளியே. தான் ... சீதாப்பிராட்டி அண்ணைக்கு ராம பிரானுக்காகவும் ஊர் உலகத்துக்காகவும் தீக் குளிச்சு, தான் கற்பின் கொழுந்து என்கிற சத்தியத்தையும் உண்மையையும் நீதியையும் மெய்ப்பிச்சுக் காட்டினுள் !-நான் இண்ணைக்கு இந்த ஊர் சமுதயாயத்துக்கு மட்டுமில்லாமல், எனக்காகவும் அக்கினிப்பிரவேசம் செஞ்சுக் கிட்டு இருக்கேன் ... காளி வெறும் கல் இல்லை என்கிற மெய்ச்சத்தியத்தை-மெய்யான தரு மத்தை இனியாச்சும் இந்த ஊர்ச் சமுதாயம் மாபிைமானத்தோட உணர்ந்துகிடட்டும்!...