பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


வேசத்தைப் படம் பிடித்துக் காட்டிவிட்டு அமைதியாகக் கிடக்கின்ற அந்தச் சரித்திர ஏடுகளுக்கு... அந்தச் சரித்திர ஏடுகளின் தீயின் நாவுகளுக்குள்ளே ஜோதியாய் மின்ன லிடுவோர் சீதாப்பிராட்டியார், நந்தனுர், வடலூர் வள்ள லார், ஜோன் ஆப் ஆர்க்.........

பூவையின் மீனுட்சி-அவள்தான் பிரத்தட்சிய அக்னிப் பிரவேசம் செய்யும் கற்பூரஜோதி, சீதை விதியின் நாயகி. இந்த மீனுட்சியோ வீதிக்கு நாயகி. தெய்வத்தை விதிக்கும்அதாவது, ஆணையிடும் நாயகி. இதில் உலவும் பாத்திரங்களைத் தேடி நீங்கள் நெடுந்துாரம் பயனப்பட வேண்டாம். தெருவில், ஊரில், சேரியை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்பினுல் போதும். ஒப்புக்குப் பேசும் வசனங்கள் அல்ல இவை. உயிர்ப்புடன் உள்ள உண்மைப் பேச்சுக்கள். -

பெண் வர்க்கத்தின் அக நெருப்புப் புற நெருப்பாக மலர்ந்து அக்னிப்பிரவாகமாகப் பிரவகிக்கும் நிலை காட்டும் இந்த நூலை நாடகமாக வெளியிடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ளுகிருேம்,

கஞ்சிக் கலயத்தைத் தலையில் சுமந்து மகு டி யை க் கையிலெடுத்த பூவை (எஸ். ஆறுமுகம்) சீதாப்பிராட்டியைக் கொழு முனையில்-தொழும் நிலையில் கண்டெடுத்த மற்று மொரு சனகன். அவரை வாழ்த்துகிருேம். • .

சிற்சபேசன் பொதிகைப் பதிப்பகம்.