பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதிக்கும் ஒரு நாயகி !

விளையாட்டுடைய ஆண்டவன்தான் தனித் தன்மை வாய்ந்த நாடகாசிரியன் l-நாடகத்தை ஆக்கும் ஐயனே நாடகத்தைக் கொண்டுசெலுத்தும் இயக்குனனுக வும் அமைகிருன். அதுவே, ஒப்பிலாமணியின் ஒப்பில் லாத் தனிப்பண்பு ஆகும். அந்த ஒற்றைத் தனிப் பண் பாட்டிலேதான் விதி கள்ளத்தனமான நயத்தோடும், வினே பட்டவர்த்தனமான விநயத்தோடும் புன்னகை செய் கின்றது - படைப்பின் புதிர்வடிவான மாயச் சிரிப்பின் விளைவாகவே, மனிதனுக்குப் பொய்யானதொரு வாழ்க்கை கிடைக்கிறது; அவ் வாழ்க்கைக்கு மெய்யானதொரு விளை யாட்டும் கிட்டுகிறது - ஆனல், வாழ்க்கை விளையாட்டின் வெற்றி-தோல்வியினை அறுதியிட்டு இறுதிப் படுத்தும் ஏக போக உரிமையை அந்த ஆண்டவனே நடுநிலையாளன் என்ற பேரால் எடுத்துக் கொண்டும் விடுகிருன் ! அந்த நீதியின் நியதியேதான் இங்கே மனிதனின் விதியாகவும், மனித ஜாதியின் வினையாகவும் விளையாடுகிறது; விளை யாட்டுக் காட்டுகிறது -இதுதானே பிரச்சினைகளும் புதிர் களும் நிரம்பிய மனிதப் பிறவியின் நடைமுறை வாழ்க்கை?

உண்மை ேவாழ்க்கை ஆட்டத்திலே ஆண்டவனுக்கு உள்ள சொந்த பந்தம் எழுத்தாளனுக்கும் உண்டு; வாழ்க்கைச் சிக்கலில் விதிக்கு இருக்கும் உரி மையும் உறவும் எழுத்தாளனுக்கும் இருக்கிறது. அதனுல்தான், அந்த ஆண்டவனைப் போலே, இந்த எழுத்தாளனும் தலை சிறந்த நாடகாசிரியனுக விளங்கவும் முடிகிறது.