பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


9
சிற்பக் கலையின் உத்திகள்
தேர்வு


மீபத்தில் நானும் எனது திண்டிவனம் கலைக் கழக அன்பர்களும் மகாபலிபுரம் போயிருந்தோம். கலைக்காகவே வாழ்ந்து, கலைப் பணியையே தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்த மகாமல்லன் கனவு நனவாகிய இடம் அது. அங்கே மலைகளை வெட்டிச் செதுக்கி ரதங்களை நிர்மாணித்திருக்கிறார்கள். மலைகளையே குடைந்து மண்டபங்களை ஆக்கியிருக்கிறார்கள். பெரிய பெரிய பாறைகளில் எல்லாம் பல பல உருவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். கிருஷ்ண மண்டபத்திலே கோவர்த்தன கிரியைத் தூக்கி நிற்கும் கண்ணன், அவன் காலடியிலே ஒரு கறவைப் பசு, கன்று, பால் கறக்கும் மனிதன் எல்லாம் உண்டு. பகீரதன் தவத்தைச் சித்திரிக்கும் கற்பாறையிலே யானைகள், தேவர்கள், தவசிகள் ஏன்? உருத்திராக்ஷப் பூனைகள் கூடத்தான்! ஆதிசேடனாகிய பாயலில் பள்ளி கொள்ளும் பரந்தாமன் ஒருபுறம் என்றால், மஹிஷனைப் போரில் வெற்றி காணும் மஹிஷாசுரமர்த்தினி ஒருபுறம். இவை தவிர குரங்குக்

100