பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்


குக் குரங்கு பேன் பார்த்தல், படுத்திருக்கும் மான்கள், எழுந்திருக்கும் யானைகள் இன்னும் என்னென்ன விதமாகவெல்லாமோ கல்லுருவிலே காட்சிகள். இவைகளையெல்லாம் பார்த்தால் மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்தில் இத்தனை சிற்ப உருவங்களை நிர்மாணித்த மாமல்லன், பல்லவ அரசன் நரசிம்மன் தனது கற்பனைக்கு வரம்பு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளாமலே, சிற்பிகள் நினைத்தவிதமெல்லாம் உருவங்களைச் செதுக்க அனுமதித்திருக்கிறாரோ என்றுகூடத் தோன்றலாம். உண்மை இதுதான். கலைக்குப் பொருள் பிரதானமல்ல. கலைக்கு கலை உருவமே பிரதானமென்பது தெரியும்.

வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி
மாடும் அற்புதப் பொருளாம்
வண்டி பூட்டும் கயிறும் என்றன்
மனத்துக்கு அற்புதப் பொருளாம்
பறக்கும் குருவியோடு என் உள்ளம்
பறந்து பறந்து திரியும்
கறக்கும் பசுவைச் சுற்றி அதன்
கன்று போலத் துள்ளும்
ஈயும் எனக்குத் தோழன் ஊரும்
எறும்பும் எனக்கு நேசன்
நாயும் எனக்குத் தோழன் குள்ள
நரியும் எனக்கு நேசன்

என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதைக்கு உரிய பொருள்கள் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார் அல்லவா? அந்தப் பதில் ‘சிற்பத்திற்கு எது விஷயம்’ (Theme) என்ற கேள்விக்கும் சரியான பதில்தான்.

101