பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11
கலைச் சின்னங்கள் -
செப்பு விக்ரகங்கள்


நாட்டில் தர்மம் அருகி, அதர்மம் பெருகுகிறபோது தர்ம சம்ரக்ஷணார்த்தம் நான் அவதாரம் செய்கிறேன்” என்றார் பகவான் கீதையில். அதைப் போலவே நாட்டில் கலையின் - கலை உருவங்களின் உண்மைப் பொருளை அறியாது, அறிய மறுத்துத் தூற்றுவார் தொகை பெருகுகிறபோது, மண்ணுக்குள் மண்ணாய் மறைந்து கிடக்கும் பழைய கலைச் சின்னங்கள் பல இன்று வர ஆரம்பித்திருக்கின்றன.

பொன்னியென்னும் தெய்வத் திருநதி பாய்ந்து பெருகும் அந்தச் சோழவள நாட்டிலே அன்று கலை வளர்த்தார்கள் சோழ மன்னர்கள். ‘எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது’ கட்டினான், சோழன் கோச்செங்கணான். அவனைப் பின்பற்றி அவன் கால்வழியில் வந்த மற்ற சோழ மன்னர்களும் அற்புதம் அற்புதமான கலைக் கோயில்களை முழுக்க முழுக்கக் கல்லாலேயே கட்டினார்கள் பழையாறை முதலிய பழைய ஊர்களில். பொன்னியின் செல்வன் - ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில்