பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

என்றே அக்கோயிலுக்கு பெயர் ஏற்பட்டிருக்கிறது. இக்கோயிலும் கோச்செங்கட் சோழன் கட்டினதே என்று சம்பந்தர் கூறுகிறார்,

கொம்பியல் கோதைமுன்
அஞ்ச, குஞ்சாத்
தும்பிய துரி செய்த
துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலை சூழ்
வைகல் மேற்கத்திசை
செம்பியன் கோச் செங்
கணான் செய் கோயிலே

என்பது சம்பந்தர் தேவாரம். இப்படி ஏழாம் நூற்றாண்டிற்கு முன் கட்டப்பட்ட மாடக் கோயில்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டே மாமல்லபுரத்தில் அர்ச்சுன ரதம், தருமராஜ ரதம், சகாதேவ ரதம் எனப்படும். கற்றளிகளை அமைத்திருக்கிறான் பல்லவ நரசிம்மவர்மன். கற்றளிகளாகக் கட்டப்பட்ட மாடக் கோயில்கள் இரண்டு பின்னர் உருவாகி இருக்கின்றன. ஒன்று காஞ்சியில் வைகுண்டப் பெருமாள் கோயில் என்னும் பரமேசுவர விண்ணகரம். மற்றொன்று உத்திரமேரூரில் உள்ள சுந்தரவரதப் பெருமாள் கோயில். இரண்டுமே மூன்று நிலை மாடக் கோயில்கள்; காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயிலைக் கட்டியவன் பரமேசுவர வர்மன். உத்திரமேரூர் சுந்தரவரதர் கோயிலைக் கட்டியவன் நந்தி வர்மன். இருவரும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவ அரசர்கள்.

இ.க - 10