பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

பகர்கின்றன. பாரத சமுதாயத்தில் தமிழ்நாட்டை மட்டும் பார்த்து விட்டால் சிற்பக் கலையின் சிகரத்தையே கண்டு விட்டவர்கள் ஆவோம்.

சிற்பக் கலையில் மட்டும்தான் பாரதம் சிறத்திருந்தது. என்பதில்லை. சித்திரக் கலையிலும் சிறந்தே விளங்கியிருக்கிறது, அஜந்தா ஓவியங்கள் அழியா அழகுடன் எழுதப் பெற்று மங்காப் புகழ் பெற்றன. துடன் போதிசத்துவர், புத்தர், அரசிளங்குமரிகள், அழகிய நங்கையர் பலரும் உருப்பெற்றனர். இவை எல்லாம் பௌத்த சந்நியாசிகளால் எழுதப்பட்டவை என்று அறிகிறபோது நாம் அப்படியே அதிசயித்து நிற்கிறோம். அதுவும் இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் அவை தீட்டப் பெற்றிருந்தும் இன்று வரை அழியா ஓவியமாக அவை நிற்கின்றன. இந்த அழியா வண்ணக்கலை மேல் நாட்டாருக்கும் கை வராத ஒன்று. வடநாட்டில் இக்கலை வளர்த்த பெருமக்கள் மொஹலாயர் என்பதும், அவர்களுக்குப் பின்பே பஹாரி, பசோலி, காங்ரா முதலிய ஓவிய மரபுகள் தோன்றின என்பதும் வரலாறு. தென்னகமாகிய தமிழகத்தில் சிற்பக் கலை சிறப்புற்றிருந்த அளவுக்கு சித்திரக்கலை உயரவில்லை என்றாலும், அஜந்தா மரபினைச் சித்தன்ன வாசலில் கண்டு மகிழ்கிறோம். பனைமலை திலைமலைபுரத்துச் சித்திரங்களில் பெரும் பகுதி அழிந்து போய்விட்டன. என்றாலும் எஞ்சி நிற்கும் ஒரு சில பகுதிகளே அவைகளின் சிறப்பைக் கூறப் போதுமானவை. இச்சித்திரக்கலை சோழர் காலத்தில் பழைய்படி சிறப்புப் பெற்றிருக்கிறது. தஞ்சை ராஜராஜன் கட்டிய பெரிய கருவறை

18