உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம். நம் நாட்டுச் சிற்பக் கலையின் சரித்திரம் கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 வருஷங்களுக்கு முன்பே சிந்து வெளிப் பிரதேசத்தில் ஆரம்பித்திருக்கிறது. மொகஞ்சதாரோ, ஹாரப்பா முதலிய இடங்களில் அன்று வளர்ந்த நாகரிகம் திராவிட நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதில் இன்று எவருக்குமே சந்தேகம் இல்லை. முத்திரைகளும் (Seals) மண்ணாலும், மணலாலும் அமைத்த மக்கள், மாக்கள் உருவங்களும், வெண்கலத்தால் ஆக்கப்பட்ட பல்வேறு சிலைகளும் அங்கு இருந்திருக்கின்றன. முத்திரைகளில் காணுகின்ற காளையின் சுவடுகளை பிந்திய சிற்பங்களில் எல்லாம் நாம் காண்கிறோம். இங்கு வெண்கலத்தில் வார்த்துள்ள ஒரு பெண்ணின் சிலைக்கும், இதற்கு 3000 வருஷங்களுக்குப் பின்பு அமராவதி ஸ்டூபாவின் சட்டத்தில் தோன்றும் ஒரு பெண்ணின் சிலைக்கும் உருவ ஒற்றுமை இருக்கிற தென்றால் அதிசயந்தானே.

வேதகாலம், இதிகாச காலத்தில் எல்லாம் இந்தியச் சிற்பம் அவ்வளவு வளர்ச்சியடைந்ததாக இல்லை. மறுபடியும் சிற்ப உருவங்கள் உருவானதெல்லாம் பௌத்தமும் சமணமும் நாட்டில் பரவிய காலத்தில்தான். மகாவீரரையும், புத்த பகவானையும் பற்பல உருவங்களாக ஆக்கியிருக்கிறார்கள் சிற்பிகள். கலை வளர்த்த வள்ளலான மௌரியச் சக்கரவர்த்தி அசோகர், எல்லா இடத்திலும் புத்த விகாரங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். தர்மச் சக்கரம் பொறித்த பிரம்மாண்டமான ஸ்தம்பங்களை நிறுவியிருக்கிறார். காளையும், குதிரையும், யானையும்,

83