பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


(தபால்காரன் வெளியிலிருந்து) தந்திசார் !

வி. அதைக் கொளுத்தி விடு! -அல்லது, என் மனைவியிடம் அதைக் கொடுத்து விட்டு, போ வெளியே உடனே! இல்லாவிட்டால் நான் வந்து உன்னை உதைத்துத் துரத்துவேன்! (ரசாயனப் பரீட்சையை நடத்துகிறான்) என்னையேன் தொந்திரவு செய்யாமல் இருக்க மாட்டேன் என்கிறார்கள்? இந்த தனியான இடத்தில் கூட? இன்னொருமுறை யாராவது கதவைத் தட்டி என்னைத் தொந்திரவு செய்தால், அப்படியே சுட்டு விடுகிறேன் !-பாதரசத்தை விட்டுப் பார்க்கிறேன் என்னகிறதென்று.-(அப்படியே செய்கிறான்)-ஆ ! இது கொஞ்சம் சுமார்! கொஞ்சம் சுமார் !

(வெளியிலிருந்து ஒரு குரல்-ஒரு நிமிஷம் நான் வரலாமோ உள்ளே ?)

வி. தீர்ந்தது! அது என் மனைவியின் குரல் என்ன கண்ணு வேணு முனக்கு? இன்றைக்கு மாத்திரம் என்னைத் தொந்திரவு செய்யாமல் விடமாட்டாயா? நான் நிரம்ப வேலையாயிருக்கிறேன் என்று உனக்கும் தெரியவில்லையா ?

(பெண் குரல்-ஒரே ஒரு நிமிஷம்)

வி.(கதவைத் திறந்து) ஒரே ஒரு நிமிஷம்!-வா உள்ளே.

பத்மா, ஒரு கையில் காபி கோப்பையுடனும், மற்றொரு கையில் ஒரு தந்தியுடனும் வருகிறாள்.

ப. கொஞ்சம் காபியாவது சாப்பிடுங்களேன்! நேற்று மாலை முதல் நீங்கள் ஒன்றுமே சாப்பிடவில்லையே.

வி. ஆமாம் என்றால்! வாஸ்தவம் தான்! - எனக்கும் கொஞ்சம் பலஹீனமாய்த்தான் இருக்கிறது. இதோ -அந்த காபியைக் கொடு இப்படி. (அதை எடுத்து குடித்து விட்டு) நிரம்ப நன்றாயிருக்கிறது ! யார் செய்தது ?

ப. நான் தான்.