பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. பருவக்காற்று ஆராய்ச்சி

பகலவன் விளைவினால், பருவக்காற்று மழைகளை உண்டாக்குவது இந்தியப் பெருங்கடல் ஆகும். பருவக்காற்றுகளை ஆராயும் முயற்சியே பருவக்காற்று ஆய்வு (Monsoon Experiment) ஆகும் . இதனைச் சுருக்கமாக மோனக்ஸ் (Monex) எனலாம்.

வரலாறு

மோனக்ஸ்-79 என்பது உண்மையில் முதல் தடவையாக நடைபெறும் திட்டமன்று. கடந்த 15 ஆண்டுகளாக, அதாவது 1964-ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பாகத் தொடக்க நிலை ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

1963-65-இல் நடந்த அனைத்துலகக் கடல் ஆராய்ச்சிப் பயணம் (IIOE), 1973-இல் முடிந்த இந்திய சோவியத்து வானியல் ஆய்வு (ISMEX), இந்தியக் கப்பல்களும், சோவியத்துக் கப்பல்களும் கலந்து கொண்டு 1977-ஆம் ஆண்டு மே 23-முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற்ற சிறு மோனக்ஸ் ஆகியவை எல்லாம் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோனக்ஸ்-79-இன் முன்னோடிகளாகும.

இந்திய உற்றுநோக்கு ஆராய்ச்சி நிலையங்களின் பொது இயக்குநர் அவர்கள் மாரிப் பருவக்காற்றுகள், கோடைப் பருவக்காற்று ஆகியவற்றின் தேசியப் பொருளாதாரச் சிறப்பை உணர்ந்ததாலும், 1970-இல் பிரசல்சில் நடைபெற்ற உலகத் திட்ட மாநாட்டின் (Global Planning Conference)