பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

பேராளராக இருந்ததாலும், அம்மாநாட்டில் தெற்கு ஆசியப் பகுதிக்குப் பருவக்காற்று ஆய்வு (MONEX) ஒன்றினை நடத்த முன்மொழிந்தார். பின், இது ஜெனிவாவில் கடந்த உலக வானிலை ஆராய்ச்சி நிலையக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று செயற்படுகிறது.

நோக்கங்கள்

இத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் பின்வருமாறு: -

1) நாட்டின் வேறுபட்ட தட்ப வெப்பநிலைப் பகுதிகளில் பருவக்காற்று அடிக்கத் தொடங்கும் நாட்களைத் தோராயமாக அறிதல்.
2) 90 நாள் கொண்ட பருவக்காற்றுக் காலத்தில் பெறப்படும் மழையின் முழு அளவை மதிப்பிடல்.
3) நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் 5-7 நாட்கள் கொண்ட காலத்தில் அதிகமாகவும், குறைவாகவும் ஏற்படும் மழையினை அறிதல், சுருங்கக்கூறின் பருவக்காற்றினைத் தெளிவாக அறிவதே நோக்கமாகும்.

காரணிகள்

பகலவன் கதிர்வீச்சு, புவிக் கதிர்வீச்சு, பெருங்கடல்களின் இயக்கம், நிலம், கடல் ஆகியவற்றின் உராய்வு விளைவுகள், மலைகள் முதலியவை பருவ மழைக்குரிய காரணிகளாகும். இதில் முக்கிய பங்கு-

4一68