பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

வாக்குவதில் ஆற்றல்வாய்ந்த சோமலி நீரோட்டத்திற்குப் பங்குண்டு என்னும் ஒரு நம்பிக்கையுள்ளது. இதனை ஆராய இக்கப்பல்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரை நெடுக உற்று நோக்கல்களை எடுத்த வண்ணம் உள்ளன.

இந்நீரோட்டத்தை ஆராய்ந்தபின், இக்கப்பல்கள் அரபிக்கடல், வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள இந்தியக் கப்பல்களோடு சேர்ந்து, தெற்கு அல்லது வடக்காகப் பல்கோணத் தோற்றத்தை (Polygonal configuration) எடுக்கும்.”

அமெரிக்கா, தற்கால அறிவியல் கருவிகள் நிறைந்த வான ஊர்தியினை வழங்கும். காட்டின் குறுக்காக வட-தென் திசைகளிலும் கிழக்கு மேற்குத் திசைகளிலும் இவ்வூர்தி இயங்கி, வேண்டிய வானொலி அளவீடுகளை எடுக்கும்.

இத்திட்டத்தில் நான்கு இந்தியக் கப்பல்களும் பங்குகொள்ளும். இவற்றில் குறிப்பிடத்தக்க அளவீடுகளை எடுக்கப் போதிய கருவிகள் உள்ளன.

அடுக்கு வெளியில் உள்ள காற்றுகள், நிலவும் வெப்பநிலை ஆகியவற்றின் அளவீடுகளை மூன்று நிலையங்களிலுள்ள ஏவுகணைகளால் எடுக்கப்படும். அவை தும்பா (7° வ), ஸ்ரீகரிகோட்டா (16° வ), பாலசோர் (22° வ) ஆகும். இந்த உற்று நோக்கல்கள் உருசியக் கப்பல்கள் எடுக்கும் ஏவுகணை உற்று நோக்கல்களோடு ஒப்பிடப்படும். இந்தியக் கப்பல் வானிலை மிதப்புகளைப் பல இடங்களில் விட்டு, மிதப்பு உற்று நோக்கல்களை எடுக்கும்.