பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

எஸ். நவராஜ் செல்லையா


மலேசியா நாட்டு வளைகோல் பந்தாட்டக் குழுவின் ஒருவரான டாப்னேபோட்வில் என்பவருக்கு வயது 41.

அதிக வயதான அவருக்கு நேர்மாருக, இளைய ஆட்டக் காரியாக இருந்தவர் 18 வயது பள்ளி மாணவி. தென் கொரியாவைச் சார்ந்த வோ காம்லி என்னும் வீராங்கன. வயதும் பருவமும் திறமைக்கு முன்னே வளைந்து கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும் என்பது உண்கை பல்லவா ! ஆட்டத்திலே அந்தஸ்து பார்ப்பது இல்லையே! இங்கிலாந்து நாட்டு இளவரசி ஆன் என்பவர், ஒலிம்பிக் பந்தயத்தில் குதிரை சவாரிப் போட்டியில் க ல ந் து கொண்டார். இராணியாக இருந்த்ாலும், எல்லா விதி களுக்கும் உட்பட்டு, கட்டுப்பட்டு கலந்து கொண்டாக வேண்டுமே ! அங்கே அந்தஸ்து ஏது ? பதவி, பணம், பாரம் பரியம், பெருமை எல்லாம் விளையாட்டுத்துறையில் எடுபடாது. என்பதற்கு இது போல் பல சான்றுகள் உண்டு. பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதமருடைய மருமகள் குதிரை சவாரிப் போட்டியில் கலந்து கொண்டார். இந்த ஆசியப் போட்டியில் தான். மாதில்லா விராதா குதிரை சவாரி செய்யும் பொழுது. கீழே விழுந்து மயக்க மடைந்து விட்டார். காயமடைந்து போனது அவர் ஒட்டிய குதிரை. அவரேச போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். அவரது ஆர்வத்தை யும் முயற்சியையும் நாம் பாராட்டலாம்.