பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

எஸ். நவராஜ் செல்லையா


அவருடன் குத்துச்சண்டை அதிகக் கன எடை இறுதிப் போட்டியில் போட்டியிட இருந்த ஈராக் நாட்டைச் சேர்ந்த பர்ஹான் வரவில்லை. அதனல் சுக்தே தங்கப் பதக்கம் பெற்ருர். பல நாடுகள் தங்கப்பதக்கம் பெற முயன்றும் மூடியாத நிலையில், ஈரான் பெற்ற 1 பதக்கம்... அதிர்ஷ்டம் தானே ! தவறுக்குத் தண்டனை ஆசிய போட்டிகளிலே மிகவும் அசிங்கமான ஒரு திகழ்ச்சி. வட கொரியா கால்பந்தாட்டக்காரர்கள். தாங்கள் தோற்றதற்குக் காரணம், நடுவர் தான் என்று கருதி அடி தடியில் இறங்கி விட்டனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நடுவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்குக் காயப் படுத் தப்பட்டார். வரம்பு மீறிய வன்முறை செயலில் ஈடுபட்ட வடகொரிய அணி, ‘இனி வரும் 2 ஆண்டுகளுக்கு, எந்தவித சர்வ தேசப் போட்டிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது" என்ற தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பு 1978ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில், கால்பந்தாட்டத்தில், வடகொரியா தென் கொரியாவுடன் கூட்டாகச் சேர்ந்து சாம்பியன் பட்டத்தை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஒழுங்குக்கு உயர்ந்த இடம் 428 வீரர்கள் வீராங்கனைகள் சீன நாட்டில் இருந்து வந்தனர். 158 வெற்றிப் பதக்கங்களை வென்று முதல் நாடு என்று புகழ் பெற்றனர்.