உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 அப்படியொரு முடிவினை எடுத்ததற்காக, சிறிது காலத்திற்குப் பிறகு காமராசர் மிகவும் வருந்தினார். இந்த அரசியல் மாறுதல்களுக்கிடையே, அண்ணாவின் தலைமையில் இயங்கிய தி. மு. கழகம் 1952-ஆம் ஆண்டு, முதல் பொதுத் தேர்தலில் கலந்து கொள்வதில்லையென முடிவெடுத்தது எனினும், 1957-ஆம் ஆண்டு பொதுத் . தேர்தலில் கலந்து கொண்டு 15 இட இடங்களைச் ; சட்டப் பேரவையில் பிடித்தது. சட்டமன்ற தி. மு. க. குழுவின் தலைவராக அண்ணா விளங்கினார். 1962 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர் தலில் அண்ணா வெற்றிவாய்ப்பை இழந்தார். எனினும் ஐம்பது பேர் தி. மு. க. சார்பில் வெற்றிவாகை சூடினர். காஞ்சித் தொகுதியில் வெற்றி பெற இயலாது போன அண்ணா அவர்கள், டெல்லி மாநிலங்கள் அவையில் ஆற்றிய விவாதங்களின் வாயிலாக அனைவரையும் வெற்றி கண்டார். 1966-ஆம் ஆண்டு! இந்திராகாந்தி, பிரதமராக வீற் றிருக்கிறார் மாநிலங்களவையில்! அண்ணா பேசுகிறார்! எதைப்பற்றி? அவசரகால சட்டத்தை அகற்றாததைக் கண்டித்து! அந்த அவசர காலச் சட்டத்தில், எழுத்துரிமை-- பேச்சுரிமை பறிக்கப்படவில்லை. சர்வாதிகாரத்திற்குக் கதவு திறக்கப்படவில்லை. 'மிசா' அரசியல்வாதிகளின் குரல்வளையைக் கெளவிடவில்லை. எனினும் அவசரகாலச் சட்டம் கூடத் தேவையற்றது, உடனே ரத்து செய்ய வேண்டுமென அண்ணா முழங்கினார்.