உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 அந்தக் குழுவின் அறிக்கையைக் கழகத்தின் துணைக் குழு (மாறன் செழியன் குழு) ஒன்று பரிசீலித்து, கழகச் செயற் குழுவில் விவாதித்தது. கழக மாநாடுகளில் பொதுக் குழுவில் மாநில சுயாட்சித் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. திருச்சியில் நடைபெற்ற கழக மாநாட்டுக்குப் பஞ்சாப் முதல்வர் குர்நாம் சிங் அழைக்கப்பட்டிருந்தார். மாநில சுயாட்சிக்கு ஆதரவான கருத்துக்களை அகாலிதளக் கட்சி யின் சார்பில் அறிவித்தார். சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு ஒன்று மிகச் சிறப்புற நடைபெற்று அதில் பல் வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கு பெற்றனர். காங்கிரஸ் கட்சியில் பிளவு 1969-ஆம் ஆண்டு டெல்லியில் பிரதமர் இந்திரா காந்திக்கும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மிடையே பிளவு ஏற்பட்டது. இந்திரா எதிர்ப்புக்குத் தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர் பெருந்தலைவர் காமராசர்! குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் மறைந்து விடவே, அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதற்கான போட்டி உருவாயிற்று. இந்திரா குழுவினர் வி. வி. கிரியை ஆதரிக்க விரும்பினர். மொரார்ஜி, காமராசர் குழுவினர் சஞ்சீவ ரெட்டியை ஆதரிக்க விரும்பினர். அன்றிருந்த இந்திய நாட்டு அரசியல் சூழலில் தி. மு. கழகம் வி. வி. கிரியை ஆதரித்தது. தமிழக முதல்வரான நானும், பஞ்சாப், மேற்கு வங்க முதல்வர்களும் டெல்லியில் கூடிப் பேசினோம். "வி.வி. கிரியை ஆதரிக்கிறோம்” என்ற முடிவு எடுக்கப்பட்டதில் தி. மு. கழகத்தின் பங்கு மிக முக்கியமான தாகும். வங்கி இ.-2