உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்கும் வகையில் வழி செய்து கொண்டார் இந்திரா காந்தி! உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் மாற்றுவதற்காக-தனிப்பட்ட ஒரு நபருக்காக சட்டங்கள் திருத்தப்பட்ட கொடுமை கண்டு நல்லோர் கொதித்தனர். எப்படியோ, இந்திரா பதவியைக் காப்பாற்றிக் கொண் டார் என்பதோடு, தி.மு.க. தன் நிலையை நிறுத்திக் கொண்டது. இந்திரா அத்துடன் நிற்கவில்லை. தேசத் தலைவர் கள் மீது வீண்பழிகளை சுமத்தி ஜே. பி. உட்பட இலட்சத் திற்கு மேற்பட்டோரைக் கைது செய்து, 1975 ஜூன் 26ந் தேதி காலையில் "இம் என்றால் சிறைவாசம்! ஏனென் றால் வனவாசம்" என்கிற போக்கில் நெருக்கடிநிலையைப் பிரகடனம் செய்தார். தலைவர்கள் கைது; பத்திரிகைகள் முன் தடை; நாடு செயலிழந்து விழித்தது. தனக்குப் அரசியல் கட்சிகளையும் தணிக்கை; பேச்சுரிமைக்குத் 'கையில் ஊமை'யைப் போல் பிடிக்காத தலைவர்களையும் "வெளிநாட்டு ஏஜண்டுகள்” என்றும், "தேசத்துரோகிகள்” என்றும், "சோஷலிச விரோதிகள்” என்றும் “வன் முறையாளர்கள்” என்றும், "கொள்ளைக்காரர்கள்""கொலைகாரர்கள் வர்ணித்து இந்திரா காந்தி, என்றும் ஜனநாயகத்தைக் கொலை செய்திடக் கொடுவாளை ஓங்கி விட்டார். 1975 ஜூன் 26 காலையில் அவசர நிலைப் பிரகடனம்; அதனையொட்டி வாய்ப்பூட்டு, கைக்கட்டு. செய்திகள் அனைத்தும் இருட்டடிப்பு என்ற நிலை ஏற்பட்டதும்,