உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31 அடுத்த நாளே தி. மு. கழகத்தின் செயற்குழு தமிழகத் தலைநகராம் சென்னையில் கூடியது. செங்கற்பட்டு மாவட்ட சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த காமராசர் இந்தச் செய்தி கேட்டுப் பதறினார். 'ஜனநாயகத்திற்குப் பேராபத்து வந்துவிட்டது' என்று கூறினார். உடனடி யாக தேசத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று முழங்கினார். கழகத்தின் அமைப்பு ரீதியான செயற்குழுத் தீர்மானமும் இந்திராவின் சர்வாதிகாரப் போக்கைச் சுட்டிக் காட்டியதோடு, நெருக்கடி நிலைப் பிரகடனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தது. தமிழ்நாடு, தொன்மைக் காலந்தொட்டு, ஜனநாயகத் தில் நம்பிக்கை கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் இன்றைக்கும் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாத்து இணங்க மாட் வந்த ஜனநாயக் நெறியை இழப்பதற்கு டோம் என்று அமைப்பு ரீதியாக முதல் குரல் கொடுத்த பெருமை, தமிழகத்தில் தி. மு. க.வுக்கு உண்டு. தொடர்ந்து சில நாட்களுக்கெல்லாம் காமராசர் அமைப்பு தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி, ரீதியான ஒரு தீர்மானத்தை இந்திரா காந்தியின் நெருக் கடிப் பிரகடனத்திற்கு எதிராக நிறைவேற்றியது. தி. மு. கழகச் செயற்குழு, தீர்மானம் நிறைவேற்றிய வுடனேயே-கழக அரசு கலைக்கப்படும் என்று மிரட்டல் கள் தொடர்ந்தன. எந்த மிரட்டலுக்கும் கழகமோ, கழக அரசோ கலங்கவில்லை.