உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடந்த 27-6-75 அன்று சென்னையில் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: செயற்குழுவின் தீர்மானம் "உலகத்தின் மிகப் புகழ் வாய்ந்த மாபெரும் சனநாயக நாடாகக் கருதப்பட்டுவந்த இந்தியத் திருநாட்டில், அண்மைக் காலமாக ஆளும் காங்கிரசார் கடைபிடிக்கும் போக்கும், தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் நடைமுறைப்படுத்தும் காரியங்களும், சனநாயக ஒளியை அறவே அழித்து நாட்டைச் சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்து வருவது கண்டு தி.மு. கழகச் செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நாடு சுதந்தரம் பெற்று, விடுதலைக்கான வெள்ளி விழாவும் - குடியரசுப் பிரகடனத்திற்கான வெள்ளி விழாவும் கொண்டாடி முடித்த பிறகும், அடித் தளத்து மக்கள்-ஏழை எளியோர்-பாட்டாளிகள்- ஆகியோர் வாழ்வில் நிம்மதியற்ற நிலையேதான் நீடித்து வருகிறது; ‘அவர்களுக்காகப் பெரிய சாதனைகளை உரு வாக்கப் போகிறோம்' என்று மத்திய அரசினரால் அறி விக்கப்பட்ட பட்டியல்கள் ஏராளமெனினும், பயன் ஏதும் ஏற்படவில்லை. தனது தேர் தல் கால வாக்குறுதிகளில் ஆளும் காங் கிரசும், குறிப்பாக திருமதி இந்திரா காந்தி அவர்களும், முக்கியமாக வறுமையை விரட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றப் போவதாகக் கூறிவந்தனர்; அந்தப் பணிக்கு எந்தக் கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வறுமை நீங்கி- ஏழை எளிய மக்கள் மகிழ்வெய்தி இந்திய நாடு