________________
33 மேன்மையுறுவது எல்லாக் கட்சிகளுக்கும் உடன்பாடான் கொள்கை தான்! குறிப்பாகத் தி.மு. கழகத்தைப் பொறுத்தவரையில்- இந்திரா காந்தி அறிவித்த முற்போக்குத் திட்டங்களை வரவேற்றுப் பாராட்டித் தனது ஒத்துழைப்பையும் நல்கி யிருக்கிறது. வங்கிகளைத் தேசியமயமாக்குவது-மன்னர் மானி யத்தை ரத்து செய்வது போன்ற செயல்களை வற்புறுத்திய தும், வரவேற்றதும் தி. மு. கழக்ம் என்பதை நாடறியும். இதுபோன்ற இரண்டோர் அறிவிப்புக்களால் வறுமை தொலைந்து விடவில்லை; வறுமையை அகற்ற முடி யாததற்கான பழியை எதிர்க்கட்சிகளின்மீது சுமத்துகின்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்துவந்த இந்திரா காந்தி அவர்கள், இப்போது திடீரென 'உள்நாட்டுப் பாதுகாப்பு' என்ற பேரால் அவசரநிலைப் பிரகடனத்தைச் செய்து விட்டு-அந்த அவசரச் சட்டத்தையொட்டி ஏழை எளிய பின் தங்கிய மக்களுக்கு நன்மைகளை வாரி வாரி வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்! நன்மை செய்வதை எந்தச் சூழ்நிலை தடுத்தது? இந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் இல்லாமல், இது வரை இருந்துவந்த சனநாயகச் செயல் முறையிலேயே ஏ ஏழைகளுக்கான நன்மைகளை வழங்குவதை எந்தச் சூழ்நிலை தடுத்தது? நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலத்துடனும்—இந்தியாவின் பல மாநிலங்களில் தங்கள் கட்சி ஆட்சியுடனும் வலிவோடு விளங்குகின்ற இந்திரா காந்தி, முற்போக்குத் திட்டங்களை-ஏழைகளுக்கான நன்மைகளை - நாடாளுமன்ற, சட்டமன்றப் பெரும்பான்