உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 மையோடு சட்டமாக்க முடியவில்லை; ஆகவே, உள்நாட்டுப் பாதுகாப்புக்கான அவசரச் சட்டமென்னும் “ஆட் கொல்லி'ச் சட்டத்தைப் பிரகடனம் செய்கிறேன் என்பது, வேடிக்கையான-விபரீத வாதமாக இருக்கிறது; இன்னும் சொல்லப்போனால், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் இருக் கும் தமிழகத்தில் அல்லது கேரளத்தில் அல்லது குசராத் தில், ஏழை எளியோரை வாழ வைக்கும் சட்டங்களை மறுக் கின்ற அரசுகள் இருக்கின்றனவா? வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், ஏழை எளிய மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் தமிழகத் தி. மு. கழக அரசு நிறைவேற்றத் துடிக்கின்ற திட்டங்களை அங்கீகரிக்காமல் முட்டுக்கட்டை போடுவதில் மத்திய அரசு முனைப்பாக இருந்து வருகிறது என்பதுதான் உண் மையாகும்! சர்வாதிகாரத் தொடக்க விழா உண்மையின் உருவம் மறைக்கப்பட்டு- பொய்யின் நிழலில் நின்று கொண்டு-எதிர்க்கட்சிகளை அடக்குவதற் குத் திட்டம் தயாரித்து—அந்தத் திட்டம் ஏன் தேவைப் படுகிறது என்பதற்கான போலிக் காரணங்களைத் தேடி அலைந்து-வீண் அபவாதங்களை வாரி இறைத்து, எடுத்த தற்கெல்லாம் 'சதி' வெளிநாட்டுத் தொடர்பு, பிற்போக்கு வாதிகள் என்ற சொற்களைப் பொழிந்து-காலா காலத்திற் கும் இந்திய நாட்டு மக்களுக்கு மாசு ஏற்படுத்தும் வகை யில் திருமதி இந்திரா காந்தி, நேற்றைய தினம் (26-6-75) அதிகாலையில் சர்வாதிகாரத்திற்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார்! வெளிநாட்டார் பகையிலிருந்து நாட்டை மீட்க அணி திரண்டு நின்றவர்களையெல்லாம் இன்று, 'உள்நாட்டைப்