உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 பாதுகாக்கிறேன்' என்ற பெயரால் சிறைக் கொட்டடி களில் தள்ளியிருக்கிறார்! இந்திய மண்ணின் விடுதலைக்காகத் தியாகத் தழும்பு களை ஏற்ற பழம்பெரும் தேசபக்தர்கள் ‘கைதிகள்' என்ற பரிசினை இந்திரா ஆட்சியில் பெற்றிருக்கிறார்கள்! வெள்ளையர் ஆட்சியிலும் இல்லாத நிலை வெள்ளையர் ஆட்சியின்போதும் இல்லாத கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன! தேசத் தலைவர்களின் மீது ஏவி விடப்பட்டுள்ள அடக்குமுறை கண்டு நாடு குமுறி எழுந்துள்ளது! எல்லாச் செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டன! அப்படி ஒரு சட்டம் பாய்ந்துள்ளது இப்போது! வையம் புகழ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய் தியைக்கூட வானொலி வெளியிடவில்லை! ‘சிலர் கைது' என்று கூறி நாட்டின் நாயகர்களை- நபர்களில் சிலராக வானொலி வர்ணிக்கிறது! தணிக்கை செய்யப்பட்ட பிறகே பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரவேண்டுமாம்! விடுதலை பெற்ற இந்தியாவில், எத்தனையோ முறை எதிர்க்கட்சிகளின் எழுச்சி மிக்க கிளர்ச்சிகள் எரிமலை களாக வெடித்திருக்கின்றன! அப்போதெல்லாம், ஜவகர் காலத்திலோ - லால் பகதூர் காலத்திலோ பாயாத உள் நாட்டுப் பாதுகாப்பு அவசரச் சட்டம், இன்று முதன்முறையாகப் பாய் வானேன்? இ 3