________________
38 சென்றோம். காமராசர், கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பி அழுதார். "தேசம் போச்சு! தேசம் போச்சு!' என்று கதறினார்.நான் அப்போது அவரிடம் சொன்னது இதுதான்: "இப்போது கட்சிகள், பிரச்சினைகள் எதுவுமில்லை. சனநாயகம் இருந்தால்தான் ஒருவருக்கொருவர் கருத்துக் களால் மோதிக் கொள்ளக்கூட முடியும். எனவே சன நாயகத்தைக் காக்க ஓரணி அமைப்போம்! நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகி விடுகிறோம். சனநாயகம் காக்கும் போருக்கு நீங்கள் தலைமையேற்றிடுங்கள். நாங்கள் உங்கள் பின்னே அணி வகுக்கிறோம்!" . காமராசர், "கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து பதவி விலகுவதை விரும்பவில்லை. கொஞ்ச நாள் பொறுத் துக் கொள்ளலாம்” என்று கூறினார். கர்நாடகத்திலிருந்து வீரேந்திர பட்டீல் சென்னைக்கு வந்தார். அவரிடமும் கழக அரசு பதவி விலகிட வேண்டுமென்ற கருத்தைச் சொன்னோம். அவரும் அதை ஏற்கவில்லை.
- சோஷலிஸ்டுக் கட்சித் தலைவர் கோரே எம். பி. வந்தார். கழக அரசு, பதவி விலகவேண்டுமென்ற கருத்தை அவரும் ஒப்பவில்லை.
இன்றைய ஜனாதிபதி, நீலம் சஞ்சீவரெட்டியார் சென்னைக்கு இரண்டு, மூன்று தடவைகள் வந்தார். சந்தித்து விவாதித்தோம். அவரும் கழக அரசு பதவி விலகுவதைச் சிறிதுகூட விரும்பவில்லை. இப்படிக் கைதாகாமல் இருந்த தலைவர்களும், தலை மறைவாக இருந்த பெர்னாண்டஸ் போன்றவர்களும் தமிழ் நாட்டில் தி. மு.க. ஆட்சி பதவி விலகிவிடக் என்றே தகவல் தந்தவண்ணமிருந்தனர். கூடாது