________________
39 சுதந்திரக் காற்றை சுவாசித்த இரண்டே மாநிலம் இந்தியாவில், சுதந்திரமாக சுவாசிப்பதற்கு இருக்கிற இரண்டு மாநிலங்கள் ஒன்று குஜராத்! மற்றொன்று தமிழ் நாடு! அந்தச் சுதந்திரக் காற்றையும் இழந்துவிடக் கூடாது என்பதே அவர்கள் கருத்து. இந்திராவின் சர்வாதிகாரக் கொடுமைகளையும் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பயங்கரச் செய்திகளையும், அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்ட அவதிகளையும், அநியாயங் களையும், ஏடுகளில் கண்டறிய முடியாத அளவுக்குத் தடுக்கப்பட்ட பொது மக்களுக்கு, துண்டறிக்கைகள் மூலம் - கூட்டங்கள் மூலம்-செய்திகளை சொல்ல தி. மு. கழகம் தமிழ் நாட்டு அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்தது பயனுள்ளதாக அமைந்தது. இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் தவிர இந்திரா காங்கிரசின் ஆளுகைக்கு உட் பட்ட எல்லா மாநிலங்களிலும் அவசர காலக்கொடுமையை மக்கள் நேரடியாக அனுபவித்துப் பதைத்தனர். அவசர காலச் சட்டத்தின் நூற்றுக் கணக்கான தீமைகளை மக்கள் மீது பாயவிடாமல் தடுத்துக்கொண்டு அந்தச் சட்டத்தின் காரணமாக விளைந்த ஒன்றிரண்டு நன்மைகளை மட்டும் மக்களின் பக்கம் செல்ல விடுகிற அளவுக்குத் தி.மு.க. அரசு, ஒரு கேடயம் போல் திகழ்ந் தது. பதுக்கல் பேர் வழிகள், கள்ளக் கடத்தல்காரர்கள் தடை செய்யப்பட்ட கட்சியைச் சார்ந்தோர், மத்திய அரசு தாக்கீதுகளின்படி மாநில அரசால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு, 'மிசா' கைதிகளாக வைக்கப் பட்டார்கள் என்றாலும், வேறு எந்த அரசியல் கட்சிக்காரர் களையும் மிசாவில் கைது செய்யும் காரியத்தைக் கழக அரசு மேற்கொள்ளவில்லை,