உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால், பத்தாண்டுக்காலம் இந்தியப் பிரதமராக இருந்து, இந்திரா செய்த மகத்தான சாதனைகளில் ஒன்றாகவும், யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாகவும், சரித்திரத்தில் இடம் பெறும் அளவுக்கு உலகெங்கும் பரவி யதாகவும் இருப்பது, இருபது மாதகால இந்திராவின் எதேச்சதிகாரம் பெற்றெடுத்த அவசர காலமெனும் நெருக்கடிக் குழந்தை! அந்தக் குழந்தை, குழந்தைக்குரிய அழகுடனோ, பொலிவுடனோ பிறக்குமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? முசோலினியின் அகன்று பிளந்த வாயும், தடித்த உடலும் - இட்லரின் நறுக்கு மீசையும் நெற்றியில் நீண்டு தொங்கும் முடியும் கொண்டு "இந்திரா மாதா" பெற்றெடுத்த அந்தக் குழந்தை விளங்கியது. குழந்தைப் பருவத்திலேயே உலகில் உள்ள சரித்திரங் களில் வர்ணிக்கப்படும் சர்வாதிகாரிகள் அத்தனை பேரின் மொத்த உருவமாக அது தோன்றியது. இந்திய வரலாற்றில் இந்திரா காந்தியின் வளர்ச்சிக் கும் வீழ்ச்சிக்கும் ஏதோ ஒரு வகையில், ஆனால் மிக முக்கியமான வகையில் தமிழ்நாடு காரணமாக இருந்திருக் கிறது. இதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டால், இந்திய நாட்டு வரலாற்றினை எழுதுகிறவர்கள், நமது முன்னாள் வரலாற்று ஆசிரியர்கள் செய்த தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். முன்னாள் வரலாற்று ஆசிரியர்கள் செய்த தவறு என்ன?