________________
67 ஏடுகளிலோ தி. மு. கழக்த்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற விபரத்தையோ, கிளைக் கழகங்களின் எண்ணிக்கையையோ கூட வெளியிடக் கூடாது. காமராசரைப் பெருந்தலைவர் என்று குறிப்பிடக் கூடாது. அண்ணாவின் பெருமைகள், சிறப்புக்கள் பற்றியோ, அண்ணாவுக்கும் தி. மு. க. முன்னணியினர்க்கும் இருந்த தொடர்பு பற்றியோ, கழக ஏடுகளில் எழுதக் கூடாது. "கலைஞர் கடிதம்” என்ற பெயரால் முரசொலி யில் நான் எழுதி வந்த கடிதங்கள் மூன்றில் இரண்டு பாகம், ஒவ்வொரு நாளும் தணிக்கை அதிகாரிகளால் வெட்டி எறியப்பட்டன. திடீரென ஒருநாள் இனிமேல் முரசொலியில் கலைஞர் கடிதம் என்ற பகுதியே வரக் கூடாதென்று தணிக்கை அதிகாரிகள் ஆணை பிறப்பித் தனர். அதாவது என் பெயரில் எழுதவே கூடாது என்பது அவர்களது உள்நோக்கம். அதன் பிறகுதான் "கரி காலன் பதில்கள்" என்றப் பகுதியில், புனைபெயரில் கேள்விக் குப் பதில்கள் எழுதினேன். அதிலும் இருபது கேள்விகளுக் குப் பதில் எழுதியிருந்தால், ஐந்து அல்லது ஆறு கேள்வி கள்தான் தணிக்கை அதிகாரியால் அனுமதிக்கப்படும். தணிக்கை அதிகாரியால் வெட்டப்பட்ட ஒரு கேள்வி பதிலைப் பற்றிய விபரம் இதோ- கேள்வி: இன்னமும் மக்களிடையே ஒரு சாரார் பேய், பூதம், பிசாசுகள் இருப்பதாக நம்புகிறார்களே; அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? பதில்: பேய், பூதம், பிசாசு என்று கூறுவது கற்பனை! ஏற்றுக் கொள்வது மூட நம்பிக்கை! பேய், பிசாசுகள் இல்லை என்பது பற்றி பகுத்தறிவுச் செம்மல் மா. சிங்கார வேலர் எழுதியுள்ள நூலை வாங்கிப் படிக்கவும். இ.5