உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 இதை ஏன் தணிக்கை அதிகாரி அனுமதிக்க மறுக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவரிடமே தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டேன் . அவர்சொன்னபதில் என்ன தெரியுமா? "நீங்கள், பேய் பிசாசு பூதம் என்று எழுதும் போது அதுமறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்." இப்படி அந்த அதிகாரி கூறிய விளக்கத்தைக்கேட்டு சிரிப்பதா அழுவ தா என்றே புரியவில்லை மறியல் செய்து கைதானேன் ‘‘-என் அன்னையை விட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்." இந்த வாக்கியம் முரசொலியில் வரக்கூடாது என்று தணிக்கை தடை விதித்தது. நான் மேலதிகாரிகளுக்கு முறையிட்டேன். பயனில்லை. பிரதமர் இந்திராவுக்குத் தந்தி கொடுத்து விட்டு, தமிழ்நாட்டு 61 “சீப் செக்ரட்டரி”க்கும் தகவல் அறிவித்து விட்டு, "சென்சார் கொடுமை”யை எதிர்த்துத் தனியொருவனாக மறியல் செய்யப் போவதாகத் தெரிவித்துவிட்டு, அண்ணா சிலைக்கு மாலை போட்டுவிட்டுப் புறப்பட்டேன். முன் கூட்டி விளம்பரமில்லாமலே நான் இந்தச் செயலில் ஈடுபட்டுங்கூட அண்ணாசாலையில் பெருங்கூட்டம் கூடியது! உடனடியாகக் கைது செய்யப் பட்டேன். இந்தச் செய்தி, நெருக்கடி நிலை ரத்தாகும் வரையில்நாட்டில் யாருக்குமே தெரியாது. அப்படியொரு பத்திரிகைச் சுதந்திரம்(?) இருந்த காலம் அது! கழக ஏடுகளில் குறிப்பாக முரசொலியில் ஒவ்வொரு எழுத்தும் தணிக்கை அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டால்