உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

69 தான் வெளிவர முடியும். நீதி மன்றத்தில் முறையீடுகள் செய்து கொள்ளப்பட்டன. இப்படிப்பட்ட பிரச்சினைகளை விசாரணைக்கே எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நீதி மன்றங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. டெல்லியிலிருந்து வந்த துண்டறிக்கைகள்! கழக ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த நாளே, டெல்லி அச்சகத்தின் பெயர் பொறித்த நாலு பக்கமுள்ள துண்டு, வெளியீடு ஒன்று லட்சக்கணக்கில் போலீஸ் வேன்களிலும், ஜீப்களிலும் தமிழ்நாடு முழுதும் பட்டி தொட்டிகள், பட்டினக் கரைகள் எங்கணும் விநியோகிக்கப் பட்டன. அந்தத் துண்டு அறிக்கையில் "கருணாநிதிக்கு முப்பது கோடி ரூபாய் சொத்து இருக்கிறது" என்ற முற்றிலும் அவதூறான பொய்மை நிறைந்த வாசகங்கள் குறிக்கப் பட்டிருந்தன. அந்தத் துண்டு நோட்டீசில் உள்ள அவ தூறுகளை இடை டவிடாமல் வானொலியும் வந்தது. ஒலிபரப்பி இவற்றுக்கெல்லாம் பதில்கூற, விளக்கமளிக்க எழுத் துரிமையும், பேச்சுரிமையும் இல்லை. அதே நேரத்தில் தி. மு. க. எதிர்ப்பு ஏடுகள் எவ் வளவு பொய்யை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தட்டி விடப்பட்டன. தடை விதிப்பில் சவ ஊர்வலங்கள், திருமண விழாக் கள், மதச் சடங்குகள் உட்படுத்தப் படவில்லை. ஏனோ தெரியவில்லை; எதேச்சாதிகாரிகளின் பார்வையில் அவை படவில்லை. மதுரைச் சிறையில் மிசா கைதியாக இருந்த சாத்தூர் பாலகிருஷ்ணன் மறைந்து விட்டார். சிரித்த முகத்துடன் சிறை சென்று வெளியே பிணமாக வந்த அவரை வணங்கி