________________
78 எதிராக சாட்சியம் திரட்ட வேண்டுமென்பதற்காக அதிகாரிகள், சிறையிலிருந்த மிசாக் கைதிகள் சிலரை பரோலில் எடுக்க ஏற்பாடுகள் செய்து அவர்களை உதக மண்டலம் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று ஓரிரு மாதங்கள், உல்லாசம் அனு பவிக்கச் செய்து தாங்கள் எழுதியவைகளில் கையெழுத் துக்களைப் பெற்றுக் கொண்டு, பிறகு சில நாட்களில் விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பினர். கழகத்தவர்மீது வழக்குப் பதிவு எங்கள் மீது விசாரணைக் கமிஷன் போதாதென்று கோதுமை விற்பனை சம்பந்தமான கிரிமினல் வழக் கொன்றும் என் மீது போடப்பட்டது. கழகச் செயற்குழு நடைபெற்ற போது, கழகச் செயற்குழு நடைபெற்ற இடத்திற்கு வெளியே நடை பெற்றதாகக் கூறப்பட்ட ஒரு நிகழ்ச்சியை யொட்டி என் மீதும், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், கோவை ராச மாணிக்கம், ஜி. லட்சுமணன் எம். பி., இளம்பரிதி எம்.எல். சி., மற்றும் பல தோழர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கொன்றும் தொடுக்கப்பட்டது. நெருக்கடி நேரத்தில் அரசியல் வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனும், தொடரப்பட்ட வழக்குகளும் தமிழகத்தைப் பொறுத்த வரையில் இன்னமும் முடியவில்லை. இந்திராவின் பழிவாங்கும் போக்கின் காரணமாக, பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பிரதாப் சிங் பாதல் மீது விசாரணைக் கமிஷன் போடப்பட்டு, அதன் அடிப்படை யில் கிரிமினல் வழக்கும் போடப்பட்டு பாதலுக்கு எதிராக தீர்ப்பும் வழங்கப்பட்டது.