________________
78 நெருக்கடியின் போது கடைசியாகச் சில மாதங்கள், சுற்றடைப்புகளுக்குள் கூட்டங்கள் நடத்தலாம் என்ற அனுமதி கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு நான் சில கூட்டங்களில் கலந்து கொண்டேன். அப்போது தமிழ் நாட்டின் ஆங்கில ஏடுகளில் ஒன்றான "இந்து" ஒரு நீண்ட தலையங்கமே தீட்டியது. "விசாரணைக்கமிஷனை சந்தித்தவாறு,கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட கருணாநிதி, பொது மேடைகளில் பேசவோ, விசாரணைக் கமிஷனை விமர்சிக்கவோ அனுமதிக்கப்படலாமா?" என்ற கேள்வி யை அது எழுப்பியது. ஆனால் நாட்டையே காடாக்க முனைந்த இந்திரா காந்தி இப்போது விசாரணைக் கமிஷன் முன்னும்; கிரிமி னல் வழக்குகளின் முன்னும் நின்று கொண்டிருக் கிறார். அவர் நாடு முழுதும் பவனி வரலாமாம்; அதே ‘இந்து வரவேற்கிறது! வாழ்த்துகிறது! இந்து ஏட்டின் மனப்பான்மை கொண்டோர் அவர் தம் அடிமைகள் இன்னமும் தமிழ்நாட்டில் கொட்ட மடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தை ஓடுக்கிட உதவும் இன்றைய அரசு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, திரா விடர் இயக்கத்தை தமிழ் தேசீய உணர்வை ஒடுக்கிட உதவும் வகையில்தான், இன்று தமிழ்நாட்டில் அமைந் துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகின்றது. அதன் முதலமைச்சர் சட்டப் பேரவையிலேயே நெருக்கடி நிலையை ஆதரித்து அதன் அவசியத்தை வலியுறுத்தி ஜே பி.யை வன்மையாகக் கண்டித்து இன்ன