________________
78 மும் பேசுகிறார் என்றால்; ஜனநாயகத்தின்பால் அவருக் குள்ள பற்றும் பாசமும் தெளிவாகிறதல்லவா? அவரது எஜமானியாக விளங்கும் இந்திரா காந்தி இவ்வளவுக்கும் பிறகு நெருக்கடி நிலைப் பிரகடனமும் அதன் தொடர்பான நடவடிக்கைகளும் நியாயமானதே என்று உறுதியோடு கூறும் போது அவர் வழிநிற்கும் தமிழக முதல்வர் எம் ஜி. ஆரும் அப்படித்தானே கூற வேண்டும்? பன்சிலால் ராஜ்யத்தில் அவரது மகனின் ஆணைப்படி காவல் நிலையத்தில் அவனுக்கு வேண்டாத ஒரு குடும்பம் பட்டபாட்டைப் படித்தாலே கண்கள் நீர் வீழ்ச்சிகளா கின்றன. சகோதரனையும் சகோதரியையும் நிர்வாணமாக்கி காவல் நிலையத்தில் ஒரே அறையில் போட்டுப் பூட்டிப் போர்வையொன்றுக்குள் இருவரையும் ஒரு சேர படுக்க வைத்துக் கொடுமை புரிந்தார்கள், சண்டாளர்கள் என்று கேள்விப்பட்ட பிறகும் - சஞ்சய் காந்தியின் மாருதியின் ஊழல், காந்தியின் நகர்வாலா ஊழல், அனைத்து நாட்டு ளாலும் பேசப்பட்ட பிறகும்- இந்திரா மக்க காந்தி, நேரு, பாரதி, அண்ணா போன்றோரின் பொன் மொழிகள், அவர் தம் பெயர்கள் ஏடுகளில் எடுத்துக் காட்டுக்களாக கூடப் பயன்படுத்தப்படக் கூடாது என்று எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்ட பிறகும்- சமூக விரோதிகளை அடக்குகிறேன் என்ற போர்வை யில், அரசியல்வாதிகளைக் கொடுமைப்படுத்த 'மிசா' பயன் படுத்தப்பட்ட பிறகும் - நெருக்கடிநிலைக்கு 'லாலி' பாடுகிற ஒரு கூட்டம் இருப்பது ஆச்சரியம் தான்!