பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கொண்டவை. ஆகவே இன்றைய உலகம் ஜனநாயக முகாம், ஸோஷலிஸ்ட் முகாம் என இரண்டு முகாம்களாகப் பிரிந்திருக்கின்றது.ஸாேஷலிஸ முகாமுக்குத் தொழில் உற்பத்தியில் தழைத்தோங்கும் வல்லரசான ஸோவியத் ரஷ்யா தலைமை வகித்திருக்கின்றது; ஜனநாயக முகாமுக்குத் தொழில் உற்பத்தியில் முதன்மையாயுள்ள வல்லரசான அமெரிக்க ஐக்கிய நாடு தலைமையாக நிற்கின்றது.

இரண்டு முகாம்களுக்கும் வேற்றுமைகளும் அதிகம். ஸோஷலிஸ்ட் முகாமில் ஒற்றுமை அதிகம்; எல்லா நாடுகளும் ஒரே லட்சியம், ஒரே சித்தாந்தத்தைக் கொண்டவை. ஜனநாயக முகாமில் பெரிய வல்லரசுகள், முதலாளித்துவ முறையிலே முழு நம்பிக்கையுள்ள நாடுகள், தொழில் உற்பத்தியில் பின்தங்கிய நாடுகள், புதிதாகச் சுதந்தரம் பெற்ற நாடுகள், ஸோஷலிஸப் பாணியில் பெருந்தொழில்களையும், தனி மனிதர் முயற்சியில் மற்றைத் தொழில்களையும் நடத்திவரும் நாடுகள் ஆகிய பலதிறப்பட்ட நாடுகள் இருக்கின்றன. |

ஸோஷலிஸ்ட் முகாமில் இரண்டாவதான சீன தொழில், வாணிபம்,படைவலி ஆகியவற்றில் முன்னேறிப் பெரிய வல்லரசாக விளங்குகின்றது. ஆதிக்கியம் பெற்ற பத்து ஆண்டுகளுக்குள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் சாதனைக்கு உறுதுணையாயிருந்தவை கட்சியின் உறுதியும், சர்வாதிகாரமும், கான் பூக்கள் என்று சொல்லப்பெறும் தொண்டர் படையினரும், நாட்டின் நிலைமையும், மக்களின் உற்சாகமும், விவசாயத்தை விரைவில் விருத்தி செய்யவேண்டும், தொழில்களை விரைவில் வளர்க்கவேண்டும், முதன்மையான உலக வல்லரசுகளில் சீனாவும் ஒன்றாக நிற்கும்படி செய்யவேண்டும் என்று மக்கள் ஆசைகொண்டு, ஆவே

141