பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்

1952-1957-இல் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் மொத்தப் பொருளுற்பத்தி 128 சதவிகிதம் அதிகரித்ததாகவும், விவசாய உற்பத்தி 25 சதவிகிதம் அதிகரித்ததாகவும் சொல்லப்படுகின்றது. 1958-ம் ஆண்டு இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கிற்று. இந்த ஆண்டில் தான் அளவுக்கு அதிகமான பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், நாடே முன்னேறிப் பாய்ந்து விட்டதாகவும் அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொள்கின்றது. ஆனால் பின்னால் ஒவ்வோர் ஆண்டிலும் இந்தப் ‘பாய்ச்சல்’ நீடித்திருக்கவில்லை.

1950 முதல் 1958 வரை இயந்திரத் தொழிற்சாலைகளில் 2, 812 கோடி கிராம் தங்கத்தின் மதிப்புள்ள பணம் மூலதனமாக முடக்கப்பட்டது. முக்கியமான இயந்திரத் தொழில்களில் 15 ஆண்டுகளில் பிரிட்டனை மிஞ்சிவிட வேண்டும் என்பது சீனரின் நோக்கம். சென்ற 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி போல் முன்பு எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை. தேசிய வருமானம் ஆண்டுதோறும் 14.9 சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. உருக்கு, நிலக்கரி, தானியங்கள், பருத்தி முதலிய முக்கியமான பொருள்களின் உற்பத்தி விவரமும், தேசிய வருமான விகிதமும் அடுத்த பக்கத்தில் குறிக்கப்பெற்றுள்ளன :

149