பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீன ரஷ்ய உறவுகள்

‘ரஷ்யாவைக் காட்டிலும் சீனாவில் தேசிய நன்மையிலுள்ள பற்றுதலே அதிகமாக ஆட்சிமுறையை ஆதரித்து நிற்கின்றது.’

— எட்கார் .:பெளரே



கம்யூனிஸ்ட் சீனா பல நாடுகளுடன் உறவுகொண்டிருப்பதில், ஸோவியத் ரஷ்யாவுடனும், போலந்து, செக்கோஸ்லோவேகியா, கிழக்கு ஜெர்மனி, ருமேனியா, அல்பேனியா முதலிய ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுகளுடன் கொண்டுள்ள உறவு மிக முக்கியமானது. இந்த உறவு அரசியல், பொருளாதாரக் காரணங்களுடன், கொள்கை சம்பந்தமான ஒற்றுமை மீதும் ஏற்பட்டது. அந்தப் பொதுவான கொள்கை கம்யூனிஸம். சீனக் குடியரசு ஏற்பட்டது முதல் அதற்கு ஸோவியத் உதவிகள் பல வகையில் கிடைத்து வந்தன. அவை கிடைத்திராவிட்டால், சீன முன்னேற்றம் என்பது பகற்கனவாகவே இருந்திருக்கும்.

பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஸோவியில் நிபுணர்கள் சீனாவுக்குச் சென்று தங்கி, அங்குள்ள செஞ்சேனைக்குப் பயிற்சி அளித்து வந்தார்கள். சீனா விமானங்கள் யாவும் ஸோவியத்திடம் வாங்கியவை. இப்போது சீனச் செஞ்சேனை போதிய காலாட்படைகளும், ஏராளமான இயந்திர சாதனங்களும், விமானங்களும்

182