பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 உய்குர் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எந்தக் காலத்திலும் சீன அரசாங்கத்திற்கு அடங்கியிருக்க விரும்பியதில்லை. சீனச் சக்கரவர்த்திகளின் வலிமை ஓங்கிய காலங்களில் அவர்கள் இந்த மக்களுடன் போராடி இவர்களை ஒடுக்குவார்கள்; மற்றைக் காலங்களில் இவர்கள் பெரும்பாலும் சுதந்தரமாயிருப்பார்கள். மேலும் பீகிங் தலைநகர் வெகு தொலைவி விருந்ததால், அங்கே யார் ஆண்டபோதிலும், ஸிங்கியாங்கை முழுதும் அடக்கி வைத்திருக்கவோ, அங்கே முன்னேற்றமான திட்டங்களை நிறைவேற்றவோ வசதியில்லாதிருந்தது. சென்ற 200 ஆண்டுகளாகச் சீனர் இங்கே குறிப்பிடத்தக்க அளவு ஆதிக்கியம் பெற்றிருந்தனர். பெரிய இராணுவப் போராட்டங்களுக்குப் பின் 1884-இல் ஸிங்கியாங் சீன ராஜ்யத்தின் பத்தொன்பதாவது மாகாணமாகச் சேர்க்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஏராளமான படைகள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

ஸிங்கியாங் ஸோவியத் ரஷ்யாவை ஒட்டியிருக்கும் நாடு. இந்தியாவுக்குத் திபேத்து எப்படி முக்கியமோ, அதுபோல ரஷ்யாவுக்கு இது முக்கியம். ஸிங்கியாங் தனிச் சுதந்தர நாடாக இருந்தால், ரஷ்யாவுக்கு நல்லது. சீனாவிலிருந்து எக்காலத்திலாவது வடமேற் குத் திசையில் தாக்குதல் தொடங்கினல், முதலில் ஸிங்கியாங் அதை எதிர்த்து நிற்கும். ஆனால் இப்போதைய நிலையில் ஸிங்கியாங் தனி நாடாகக்கூட இல்லாமல், ஒரு சீன மாகாணமாகவே இருக்கிறது. அங்குள்ள மக்கள் பலமுறை சீனக் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போரிட்டபின்புதான் அடங்கியிருக்கின்றனர்.

ஸிங்கியாங்கின் எதிர்ப்பு உணர்ச்சி ரஷ்யாவுக்கு உதவியானது. ரஷ்யா சீனக் கம்யூனிஸ்டுகளைச் ‘சகோ

199