பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தரர்கள்’ என்று வாயால் சொல்லிக்கொண்டிருந்த போதிலும், பல ரஷ்யர்கள் ஸிங்கியாங்கில் தங்கி, அடிக்கடி மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டிவிடுவது வழக்கமாகிவிட்டது. இவர்களுடைய வேலைகள் வெளியிலே தெரியமாட்டா. பத்திரிகைகளிலும் அவை வெளியிடப்படுவதில்லை. ரஷ்யாவுக்குச் சொந்தமான அடுத்துள்ள சைபீரியப் பகுதியிலோ, மணற்பாங்கான காஸாக் - உஸ்பெக் பகுதியிலோ நாட்டங்கொண்டு அங்கே சீனர்கள் புகுந்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்கு அக்கறை அதிகம். அந்தப் பகுதிகளைப் பல நூற்றாண்டுகளாகப் பாடுபட்டுப் பழத்தோட்டங்களாகப் பண்படுத்தி வைத்திருப்பதால் அவைகளைக் காவல் புரிவதில் கண்ணும் கருத்துமா யிருக்கிறார்கள். ‘1960–61 இல் தூங்குகின்ற நாடு எக்காலத்தும் தூங்கவேண்டியதுதான்’ என்று ஒரு ரஷ்யர் கூறியதாக டாக்டர் சத்திய நாராயண ஸின்ஹா ‘சீன ஆக்கிரமிப்பு’ என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சீனர்களைப் பற்றி ரஷ்யாவைப்போல் இந்தியர் எச்சரிக்கையா யில்லாமலிருப்பதால் நாட்டின் சுதந்தரமே பறிபோகக்கூடும் என்றும் அந்த ரஷ்யர் எச்சரிக்கை செய்தாராம். ஆகவே சீனா உக்கிரமாக வேலை செய்வதும், ரஷ்யா விழிப்புடன் இருப்பதும் ஸிங்கியாங் மாகாண சம்பந்தமாக அவசியமாயிருக்கின்றன. முன்னால் ஸிங்கியாங்கின் அபிவிருத்திக்காகவும் ஸோவியத் நாடு சீனாவுக்குப் பேருதவி செய்துள்ளது.

இரு நாடுகளுக்கும் முக்கியமான ஸிங்கியாங் போன்ற இடங்களில் எழக்கூடிய பெரிய பிரசினைகளைப் பீகிங்கும் மாஸ்கோவும் வழக்கம்போல் அமைதியாகத் தீர்த்துக்கொள்ளுமா, அல்லது பூசல்கள் விளையுமா என்பதை முன்னதாகக் கண்டுகொள்வது எளிதன்று. ஆனால் பல ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் சீனர்களுக்குத்

200