பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 கொள்கையைப் போதிக்கக் கம்யூனிஸ்ட் பள்ளிக்கூடங்களும் அமைக்கப் பெற்றிருக்கின்றன.

சீனர்களிடம் லாமாக்கள் பட்ட பாடுகளைப் பஞ்சு கூடப் பட்டிராது. திரஸங் மடத்தில் சீனர்களுக்கு வேலை செய்ய மறுத்த துறவிகள் அனைவரையும் அறைகளில் உணவில்லாமல் நான்கு நாட்கள் பூட்டி வைத்தார்கள். ‘உங்கள் பகவான் உங்களுக்கு உணவளிப்பார் !’ என்று ஏளனம் செய்தார்கள். பெளத்த தர்ம சாத்திரங்களைக் கிழித்துச் சீனப்படை வீரர்கள் ஜலமலங்களைத் துடைத்துக் கொள்வதைத் துருக்லு- ஸூங்க்ராம் என்ற துறவி ஆட்சேபித்தார். அவருடைய முழங்கையைச் சீனர் வெட்டி யெறிந்துவிட்டனர். சில துறவிகளைச் சீனர் ஏர்களில் கட்டி உழுததுடன், அவர்கள் புல்லையே தின்னும்படியும், அவர்கள் முதுகுகளில் மற்ற ஜனங்கள் ஏறிச் சவாரி செய்யும்படியும், அடித்துத் துன்புறுத்தினர்கள். பொது மக்களைக் கூட்டமாகக் கூட்டி வைத்தே லாமாக்களை அவமானப் படுத்துவது வழக்கம். ஜனங்களைக் கொண்டே லாமாக்களை அடிக்கும்படி கட்டாயப் படுத்தினர்கள். அடிக்க மறுத்த ஜனங்கள் பலரைச் சீனப்படையினர் தாமே அடித்துக் கொன்றனர். ஷர் கால்டன் கியட்ஸோ, ஆர் ரோக் டோர்ஜி சுங், ஷராங் கார்ப்போ என்ற மூன்று லாமாக்களைத் திபேத்தியர் கூட்டத்தின் நடுவில் நிறுத்தி, முதலில் சீனப் பெண்கள் அவர்களை அடித்துத் தலை ரோமங்களைப் பிய்த்தெறியும்படி செய்தார்கள். அப்பால் மூன்று லாமாக்களையும் மூன்று குழிகளில் தள்ளி, அவர்கள் மீது சிறுநீர் கழிக்கும்படி மக்களைத் துன்புறுத்தினார்கள். இந்த நாடகம் முடிந்த பிறகு, மூவரையும் சேர்த்துக் கழுத்துக்களில் விலங்குகள் மாட்டி, தலை களில் மலம் நிறைந்த கூடைகளை வைத்து, ஊரூராக அவர்களே அழைத்துச் சென்று மக்களுக்குக் காட்டி

237