பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றத் திட்டங்களுக்கு இடமில்லாது போயிற்று. ஆங்கில ஆட்சியில் எத்தனை நன்மைகள் ஏற்பட்டதாகச் சொல் லப்படினும், நாட்டு மக்களால் நடத்தப்பெறும் பொறுப்புள்ள நல்லரசாட்சி இங்கே இருக்கவில்லை. சீமையிலே ஐ. ஸி. எஸ். முதலிய பரீட் சைகளில் தேர்வு பெற்ற சில ஆங்கில் இளைஞர்கள் இந்தியாவுக்கு வந்து, மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் தலைமை அதிகாரிகளாக இருந்து, மக்களை ஆண்டு அடக்கி வந் தனர். ஒன்றரை லட்சம் ஆங்கிலேயர் முப்பதுகோடி இந்தியர்களை ஆடுமாடுகளை மேய்த்து அடைப்பது போல் அடக்கிவந்தனர். இந்தியா பெருந் தொழில் களே அமைத்து முன்னேருமல் இருந்தால்தான் இங்கி லாந்தில் உற்பத்தியான பொருள்களை இங்கு விற்ப தற்கு வாய்ப்புண்டு. எனவே இந்தியா இங்கிலாந்தின் பொருள்களுக்கு ஏற்ற சந்தையாக மட்டுமே விளங்கி வந்தது. எனினும் சில இந்தியத் தலைவர்களின் பெரு முயற்சியால் ஆங்காங்கே சில இயந்திரத் தொழில்கள் மட்டும் நிறுவப் பெற்றன. சமுதாய விஷயங்களில் ஆங்கில அரசாங்கம் தலையிட்டுப் பெரிய மாறுதல்கள் செய்ய விரும்பவில்லை. மொத்தத்தில் மக்கள் பாமர ராய், விலங்குகளாய் வாழ்ந்து வந்தனர். விடுதலையால் பிறந்த வீரம் நாடு விடுதலையடைந்தவுடன், சுதந்தர இந்திய அரசாங்கம் முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, உடனே தொழில்களே நிறுவ முன்வந்தது. மிகவும் பிற் போக்காகத் தேங்கி நின்ற நாட்டில் பெருந் தொழில் களே நிறுவுவது எளிதான காரியமன்று. கோடிக்கணக் காகப் பொருள் வேண்டும். மக்களின் மனப்பான்மை மாற வேண்டும். குடிசைத் தொழில்கள், கைத் 25 &