பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அணையும், மிக அதிகமான அளவு தண்ணிர் தேங்கும் சம்பல் அணையும், காரைக் கட்டுமானத்தில் தலை சிறந்த நாகார்ஜுன சாகர் அணையும், வேறு எங்குமே காணமுடி யாத பெரிய ராஜஸ்தான் வாய்க்காலும் அமைந் துள்ளன. இந்திய மக்களின் ஊக்கம், உறுதி, ஒத் துழைப்பு முதலியவற்றிற்கு இவைகளே சி ற ந் த எடுத்துக் காட்டுக்களாம். மக்களும், பணமும், இயந் திர சாதனங்களும் சேர்ந்து என்னென்ன செய்ய முடியும் என்பதை இவை காட்டுகின்றன. சுதந்தர இந்தியா விரைவிலே தொழில் வளம் பெறவும், சமுதாய முன்னேற்றமடையவும் தீர்மானித் தது. இதற்குரிய வழி கம்யூனிஸ்மா அல்லது ஜனநாயக ஸோஷலிஸ்மா ? இந்த இரண்டைத் தவிர மூன்ருவது மார்க்கம் இல்லாததால், இந்தியா ஜன நாயக ஸோஷ லிஸ் முறையை மேற்கொண்டது. அதன்படி மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றி, இப் பொழுது நான்காவது திட்டம் தயாரித்துள்ளது. முந்திய அடிமைச் சகாப்தம் இந்தியா மாபெரும் நாடு. 12,59,797 சதுர மைல் அளவுள்ளது. 1961 ஆம் ஆண்டுக் கணக்குப்படி இங்குள்ள மக்களின் தொகை 43, 64, 24, 429, இப் பொழுது சுமார் 47 கோடியாயிருக்கும். தமிழ்நாட் டைப்போல் மொத்தம் 15 ராஜ்யங்களும், மத்திய அரசின் நேர் ஆட்சியில் 8 சிறு பிரதேசங்களும் இருக் கின்றன. இந் நாட்டில் ஆறுகளும், மலைகளும், மற்ற இயற்கை வளங்களும் ஏராளமாக இருக்கின்றன. ஆயி னும் நவீன இயந்திரத் தொழில்கள் பெருகாததால், இந்தியா பிற்போக்கான, தேக்க மடைந்த நாடாக விளங்குகின்றது. சுமார் இரண்டு நூற்ருண்டுகளாக அந்நியரின் ஆட்சி இங்கே நிலைத் திருந்ததால், அவசிய 25.2