பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒழுங்குப் படுத்துதல் தீமையானது: அவைகளில் அது பங்கு கொண்டு நடத்துதல் பொதுப்பணத்தை விரயம் செய்வதாகும்' என்று குறித்துள்ளார். இவை யெல் லாம் சில நாடுகளில் சில காலங்களுக்குப் பொருத் தமாயிருந்தன. ஆனல் தனி முதலாளிகளின் தொழில் களில் ஏற்பட்ட போட்டியும், வலிமை மிக்கவர்கள் மெலிந்தவர்களை நசுக்கியதும், செல்வர்கள் மேலும் செல்வம் குவித்தும். ஏழைகள் மேலும் வறுமையில் ஆழ்தும் வந்தமையும், இலாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு பெண்களையும் குழந்தைகளையும் ஆலைகளில் கொடுமையாக வேலை வாங்கியதும், மற்றும் பல கொடுமைகளும் தனியார் தொழில் ந - த் து ம் முறையை மாற்றக் காரணமாயின. சில நாடுகளில் கடுமையான சட்டங்கள் இயற்ற நேர்ந்தது ; மற்றும் சில நாடுகளில் அரசாங்கமே தொழில்களை மேற் கொள்ள நேர்ந்தது. மொத்தத்தில் எல்லாத் தொழில் களேயும் தனியார்கள் தம் விருப்பம் போல் நடத்தி வந் ததில், மக்களுக்குப் பெருந் தீங்கே நேர்ந்து வந்திருக் கின்றது. அரசாங்கம் தொழில்களில் தலையிட அவசி யம் ஏற்பட்டது. முதலாளித்துவத் தொழில் முறை யால் நாட்டு மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க இயலாமையும், செல்வத்தையும் வருமானங்களையும் நீதியற்ற முறையில் சிலர் மட்டுமே பெறுவதும் முக் கியமான குறைகள் என்று கீன்ஸ் பிரபு எழுதியுள் வார். நாட்டின் பொருளாதாரத்திலும், முக்கிய மாகத் தொழில்துறையில் முதலீடு செய்வதிலும் அர சாங்கம் தலையிடாமல் பெருங் காரியங்களைச் சாதிக்க முடியாது என்றும் அவர் உணர்த்தியுள்ளார். ஆனல் தொழில்களை அரசாங்கமே உடைமையாகக் கொள்ள வேண்டியதில்லை என்பது அவர் கருத்து. தனியார் தொழில் முறையில் நெடுங்காலத்து 259