பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இவ்வாறு பல நாடுகளில் தேசியப் பொதுத் துறை பல படிகளில் அமைந்துள்ளது. ஆனல் தொழில்களில் அரசாங்கத்தின் தலையீடு எங்கும் அதிகமாகி வருகின் றது. ஐரோப்பிய நாடுகளில் தனியார் துறையிலுள்ள தொழில்களில் பொதுத் துறையைப் போலவே அர சாங்க ஆதிக்கியம் அதிகமாயுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் கூட அரசாங்கம் நாட்டின் பொருளாதா ரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அனைத்தையும் பல முறைகளில் பயன்படுத்தியே வருகின்றது. திட்டங்களின் அவசியம் எங்கு, எப்படியிருந்த போதிலும், நம் நாடு சம்பந் தப்பட்டவரை மக்கள் அனைவரும் கடுமையாக உழைக் காமல் எவ்வித முன்னேற்றமும் ஏற்படமுடியாது. கடுமையான உழைப்பு, ஆடம்பரமற்ற வாழ்க்கை, பலாத்கர்ரமான பூசல்களுக்கு.இடமில்லாதபடி நேசப் பான்மையுடன் இருத்தல் ஆகியவையே நமக்கு அவசிய மானவை. எந்தத் திட்டம் வகுத்தாலும், அது மக்க ளின் ம்னத்தைக் கவர வேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரை மக்கள் அதில் ஒத்துழைக்கும்படி செய்ய வேண்டும். சென்ற பதினைந்து ஆண்டுகளில் இந்திய சரித்திரத் திலே என்று மில்லாத முறையில் மகத்தான வேலைகள் செய்து முடிக்கப் பெற்றுள்ளன. மாபெரும் அணைகள், தொழிற்சாலைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. ஆயினும் அவைகளைப் பற்றியெல்லாம் போதிய அள வில் நாட்டிலே விளம்பரமில்லை. பெரும்பாலான மக் கள் எங்கோ ஏதோ நடந்துவருவதாகக் கருதுகின் றனரே அன்றி, நாடு அடைந்துள்ள வெற்றிகளை அவர் கள் விரிவாகத் தெரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு திட்டமும் ஐந்தாண்டுக் காலத்தில் 264